சரத்குமாரும், இயக்குனர் ஏ.வெங்கடேஷும் மீண்டும் இணையும் படத்திற்கு ‘பாம்பன்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கெட்-அப்பில் சரத்குமார் நடிக்கிறார். ‘எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் பதிவுடன் துவங்கியது. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு, என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தில் சரத்குக்மாருடன் இணைந்து பணியாற்றிய இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்திலும் இணைந்துள்ளார்.