‘சங்கமித்ரா’வை கைவிடவில்லை சுந்தர்.சி.

‘கலகலப்பு-2’ படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுந்தர்.சி.இயக்கத்தில் ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ‘கலகலப்பு-2’ படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுந்தர்.சி.யிடம் ‘சங்கமித்ரா’ கைவிடப்பட்டதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு சுந்தர்.சி.யில் பதில், ‘‘சங்கமித்ரா’வை கைவிடவில்லை. நிச்சயம் அந்த கதையை இயக்குவேன். அதற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் தற்ப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘சங்கமித்ரா’ பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், டெக்னிக்கல் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலும் அது சம்பந்தமான வேலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. படப் பிடிப்புக்கு போவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டிய கிராஃபிக்ஸ் வேலைகளே நிறைய இருக்கிறது. இது போன்ற காரணங்களால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது. இந்த வேலைகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்து விடும். அநேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பு துவங்கும்’ என்றார்.