சான்றிதழ் விமர்சனம்

வெற்றிவேல் சினிமாஸ் சார்பாக SJS சுந்தரம் & ஜெயச்சந்திரன் (JVR) தயாரிப்பில், ஜெயச்சந்திரன் இயக்கத்தில்,
ஹரிகுமார், ரோஷன் பஷீர், ராதா ரவி, அபுகான், ரவிமரியா, மனோபாலா, அருள்தாஸ், கவுசல்யா, ஆஷிகா அசோகன், தனிஷா குப்பாண்டா, ஆதித்ய கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘சான்றிதழ்’

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை அப்படிங்கற கிராம மக்கள் தங்களுக்கென்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாமல் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இந்த சிறப்பை அறிந்து மத்திய அரசு அந்த கிராமத்திற்க்கு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்கிறது, அதனை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.

தறுதலை கிராமமாக இருந்த அந்த கிராமத்தை, கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னாள் வெள்ளைச் சாமி என்பவருடைய மிகப்பெரிய தியாகத்தையும், தனது கனவு கிராமத்தை உருவாக்க எதையெல்லாம் இழந்தார் என்பதும், அமைச்சர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே சான்றிதழ் படத்தோட கதை.

 

 

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : ஜெயச்சந்திரன் (ஜேவிஆர்)

ஒளிப்பதிவு: எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன்.டி.எஃப்.டி

இசையமைப்பாளர்: பைஜு ஜேக்கப்

ஆசிரியர்: ஜே.எஃப்.காஸ்ட்ரோ

கலை இயக்குனர்: நாஞ்சில் பி.எஸ். ராபர்ட்

சண்டைக்காட்சிகள்: டேஞ்சர் மணி

பாடலாசிரியர்: ஜே.வி.ஆர்

நடன அமைப்பாளர்கள்: பி.வி. நோபல்.தினா.ஐ. ராதிகா

ஒலி வடிவமைப்பாளர்: UkI. அய்யப்பன் (ஜி ஸ்டுடியோஸ்)

சவுண்ட் எஃப்எக்ஸ்: ராண்டி ராஜ்

Vfx வடிவமைப்பாளர்: Hocus pocus Vfx

தயாரிப்பாளர்: எஸ்.ஜே.எஸ். சுந்தரம் & ஜே.வி.ஆர்

தயாரிப்பு: வெற்றிவேல் சினிமாஸ்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்