‘சண்டக்கோழி-2’ ரிலீஸ் தேதி
விஷால், மீரா ஜாஸ்மின் நடித்து, லிங்குசாமி இயக்கத்தில் 2005-ல் வெளிவந்து ஹிட் கொடுத்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி கொண்டிருக்கிறது. மீண்டும் விஷால் – லிங்குசாமி இணைந்துள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். சண்டக்கோழி-1 இல் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி இன்னொரு நாயகியாக வருகிறார். மற்றும் சூரி, ஹரீஷ் பேரடி, சதீஷ், அப்பானி சரத், ஹரீஷ் சிவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சக்தி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தை விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’மூலம் தயாரித்துள்ளார். இப்படம் விஷாலின் 25-வது படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், செப்டம்பர் 18-ல் விநாயகர் சதுர்த்தி அன்று ‘சண்டக்கோழி-2’ படத்தை திரைக்குக் கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான விஷால்.