விமல் – ஸ்ரேயா நடிப்பில் ஆர்.மாதேஷ்  இயக்கியுள்ள  ” சண்டகாரி- The பாஸ்” 


பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்  & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு ” சண்டகாரி – The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்..

இந்த படத்தில்  கதா நாயகனாக விமல் ,கதாநாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளனர் .முக்கியமான வேடத்தில் பிரபு , சத்யன்,  மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர்,   உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள்  நடிக்கின்றனர்.. சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .

தளபதி  விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த்  நடித்த அரசாங்கம் ,வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்.மாதேஷ் .

இது மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப் படும் படம் ஆகும் .

முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் சண்டக்காரி படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது

தொழில்நுட்பக்குழு :

திரைக்கதை அமைத்து இயக்குகிறார் R.மாதேஷ்

ஒளிப்பதிவு – குருதேவ் ,
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – கபிலன் விவேக்
எடிட்டிங் – தினேஷ்
கலை- அய்யப்பன்  
நடனம் – அபீப்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்