சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம்

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் ,
ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்,
பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ்
கொரனானி இயக்கும் , இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் துவங்கியது .

டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும்
இத்திரைப்படம் , இதுவரை யாரும் சொல்லாதப்படாத தனித்துவமான
கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது.

இப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் அப்பா, மகனாக நடிக்க, மோக்ஷா, ஹரிஷ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷ், லாவண்யா ரெட்டி, சிலம் ஸ்ரீனு, பிரமோதினி, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடவிருக்கிறார்கள் குழுவினர்.

விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இசை- அருண் சிலுவேறு,
ஒளிப்பதிவு – துர்கா பிரசாத்
கலை – டௌலூரி நாராயணா.
வசனம் – மாலி
படத்தொகுப்பு – மார்த்தாண்டம்k வெங்கடேஷ்.
நிர்வாக தயாரிப்பாளர் தீபிரெட்டி மஹிபால் ரெட்டி ,

எழுத்து இயக்கம் – தன்ராஜ் கொரனானி

Pro குணா.