சமரா விமர்சனம்

பீக்காக் ஆர்ட் ஹவுஸ் சார்பில் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் தயாரிப்பில், சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் சினு சித்தார்த் ஒளிப்பதிவில் தீபக் வாரியர் இசையில், ரகுமான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்யா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சமரா”.

காவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், தீவிரவாதி ஒருவனை டார்கெட் செய்கின்றார். அவன் தப்பித்து விடுகிறான்.

இராணுவத்தில் பணிபுரிந்த பினோஜ் வில்யா தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் விஷ வாயு தாக்கி உடல் முழுவதும் தோல் நோய் பரவி, பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.

இதனால், அவரின் மனைவி, மகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார். அடிக்கடி மகள் சஞ்சனாவை பார்த்து மட்டும் வருகிறார் பினோஜ்.

இந்த சமயத்தில், சஞ்சனா கால் தடுமாறி கீழே விழுந்து, அதிக தூரம் சறுக்கி, பிணமாக கிடந்த ரெளடி மீது விழுந்து விட,
தீவிரவாதியும் லோக்கல் ரவுடி இருவரும் பிணமாக உடல் அழுகிய நிலையில் இருக்க, அந்த ரெளடியின் ரத்தம் சஞ்சனா மீது ஒட்டி விடுகிறது.

அதன் பிறகு அங்கு வரும் ரகுமான் & டீம், பிணத்தின் மீது செலுத்தப்பட்டது ஒரு வைரஸ் என்பதை கண்டுபிடிக்கின்றனர். இதனால், சஞ்சனாவும் வைரஸால் பாதிக்கப்படுகிறார்.

இதனால், தனிமையில் வைக்கப்படுகின்றனர், பினோஜும் சஞ்சனாவும்.

கடைசியில் அந்த வைரஸ் எங்கு இருந்து வந்தது.?? யாரால் அந்த வைரஸ் உருவாக்கப்பட்டது? எதற்காக உருவாக்கப்பட்டது? வைரஸால் பாதிக்கப்பட்ட மகள் சஞ்சனாவை பினோஜ் காப்பாற்றினாரா.?? என்பதே சமரா படத்தோட மீதிக் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : பீக்காக் ஆர்ட் ஹவுஸ் சார்பில் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத்

இயக்கம் : சார்லஸ் ஜோசப்

ஒளிப்பதிவு : சினு சித்தார்த்

இசை : தீபக் வாரியர்

பின்னணி இசை : கோபி சுந்தர்

எடிட்டிங் : பாப்பன்

ஸ்டண்ட் : தினேஷ் காசி

நடனம் : டேனி பவுல்

மக்கள் தொடர்பு : மணவை புவன்