டி கிட்டு இயக்கத்தில், சத்யா தேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்தர்ராஜன், மோகன், சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சல்லியர்கள்.
சிங்கள ராணுவத்தை எதிர்த்துப் போராடுகின்ற புலி அமைப்பினர் காயமடைந்தால் அவர்களை காப்பாற்றுவதற்காக அந்தப் போர்க்களங்களில் பதுங்குகுழிகளில் மருத்துவமனைகள் அமைத்து செயல்படுகிறார்கள்.
மருத்துவராக இருக்கும் இருக்கும் சாயாதேவி அந்த மருத்துவமனையில் பணியாற்றுகிறார். சாயாதேவிக்கு உதவி செய்வதற்காக மருத்துவராக இருக்கும் மகேந்திரன் வருகிறார்.
சிங்கள ராணுவம் இவர்களின் மருத்துவக் குழுவை அழித்துவிட்டால் அவர்களை எளிதில் அழித்து விடலாம் என்று திட்டம் கட்டுகிறார்கள்.
அப்படி அவர்களை அழித்து நடத்தும் போர்க்களத்தில் சிலர் ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுகிறார்கள்.
சமயத்தில் ஈழ மருத்துவர்கள் போராளிகளாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும் கூட உயிருக்காக போராடுகிறார்கள் என்றால் அவர்களை காப்பாற்றுவதற்கு தங்களுடைய உயிரையும் கவனத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக பணிபுரிந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட மருத்துவர்களின் நிலையையும் அவர்களின் வீரத்தையும் சொல்லி இருப்பதே இந்த சல்லியர்கள் படம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : டி கிட்டு
இசை : கென் & ஈஸ்வர்
தயாரிப்பு : இந்தியன் சினிவே & எஸ் கருணாஸ் & பி கரிகாலன்.
மக்கள் தொடர்பு : ஏ ஜான்

