சச்சின் (ரீ ரிலீஸ்) விமர்சனம்

சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், தாடி பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி ரீ ரிலீஸ் ஆகியுள்ள படம் சச்சின்.

விஜய் ஊட்டியில் இருக்கும் கல்லூரியில் வந்து சேர்கிறார். அந்த கல்லூரியில் ஜெனிலியாவும் படித்து வருகிறார். ஜெனிலியாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய். இருவரும் சிறு சிறு சண்டைகள் இடையில் நண்பர்களாகி பழகி வருகின்றனர். 

சமயத்தில் ஜெனிலியாவிடம் விஜய் காதலில் சொல்ல ஜெனிலியா அதனை ஏற்க மறுக்கிறார். 

பார்த்தவுடன் வருவது காதல் அல்ல ஒரு ஒருவர் புரிந்து கொண்டு இரண்டு பேருக்கும் பிடித்து பழகிய பிறகு வருவது தான் காதல் என்று ஜெனிலியா சொல்கிறார். 

இருப்பினும் விஜய் தன் காதலில் உறுதியாக இருந்து 30 நாட்களில் நீயே வந்து என் காதலை ஏற்றுக் கொள்வாய் என்று ஜெனிலியாவிடம் சொல்கிறார்.

விஜயின் காதலை ஜெனிலியா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதை சச்சின் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு

இயக்கம் : ஜான் மகேந்திரன் 

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : ஜீவா

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது