7ஜி சிவா தயாரிப்பில், அறிவழகன் இயக்கத்தில், ஆதி, லஷ்மி மேனன்,சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சப்தம்.
மருத்துவக் கல்லூரியில் இருக்கும் பழமையான ஒரு லைப்ரரியில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இரண்டு மாணவர்களின் உடல்கள் நேராக இல்லாமல் கோணல் மாணலாகவும் மோசமான நிலையிலும் சிதைந்து இருக்கிறது.
இது ஏதோ ஒரு அமானுஷ்யமான சக்தியின் வேலைதான் என்று நினைத்து பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணராக இருக்கும் ஆதியை அந்த நூலகத்திற்கு வரவழைக்கிறார்கள் கல்லூரி நிர்வாகத்தினர்.
நிபுணரான ஆதிக்கு லட்சுமிமேனன் மீது சந்தேகம் வருகிறது. அதேசமயம் அந்த மருத்துவக் கல்லூரியில் இருக்கும் பழமை வாய்ந்த நூலகத்தில் அமானுஷ்யங்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் ஆதி. அந்த நூலகம் பல வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவர்களின் தேவாலயமாக இருந்ததையும் கண்டுபிடிக்கிறார்.
கிறிஸ்தவர்களின் சர்ச்சாக இருக்கும் அந்த இடம் எப்படி அமானுஷ்யங்கள் ஆட்கொண்ட இடமாக மாறியது? எதனால் அந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்? என்பதை ஆவி ஆராய்ச்சி நிபுணரான ஆதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே சப்தம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : அறிவழகன்
இசை : தமன்
ஒளிப்பதிவு : அருண் பத்மநாபன்.
தயாரிப்பு : 7ஜி சிவா