சாலா விமர்சனம்

பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி.விஸ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா ஆகியோர் தயாரிப்பில், எஸ்.டி.மணிபால் இயக்கத்தில், தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஸ்ரீPநாத், அருள்தாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாலா.

ராயபுரத்தில் மது கடை நடத்தும் அருள்தாஸிற்கும், சத்யா இரண்டு பேருக்கும் பகை ஏற்படுகிறது. பார்வதி பார் என்ற மது கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தும் பிரச்சனையில் சத்தியா கொல்லப்படுகிறார்.

அந்த அந்த பிரச்சனையில் அருள் தாஸின் உயிரை தீரன் காப்பாற்றுகிறார். அதனால் தீரனை தத்தெடுத்து வளர்க்கிறார் அருள் தாஸ். பார்வதி பார் மூடப்பட்டு அதன் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் சத்யாவின் உறவினரான சார்லஸ் வினோத் அருள்தாஸை எப்படியாவது கொள்ள வேண்டும் பார்வதி வரை தான் எடுத்து நடத்த வேண்டும் என்று அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கும் பள்ளி ஆசிரியராக இருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ். இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட, எப்பொழுது பார்த்தாலும் மது கடைகளை மூட வேண்டும் என்றும், மதுக்கடைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துக்கொண்டு போராடிக் கொண்டே இருக்கிறார்.

மதுக்கடைக்கு முன்பாகவும் ரேஷ்மா வெங்கடேஷ் போராட்டம் செய்கிறார் ஆரம்பத்தில் ரேஷ்மா வெங்கடேசன் மீது கோபபடும் தீரன், பிறகு அவர் செய்யும் சமூக அக்கறையில் அவர் மீது காதல் காதல் ஏற்படுகிறது.

23 ஆண்டுகளாக நடந்து வந்த பார்வதி பார் வழக்கு முடிந்து குத்தகைக்கான தீர்ப்பு வருகிறது. அந்த பார்வதிபாரின் உரிமையை தீரனின் உதவியோடு அருள் தாஸ் தனக்கு சொந்தமாக்குகிறார்.

இதனால் கோபமடையும் சார்லஸ் வினோத், அருள் தாஸை கொலை செய்ய முடிவு செய்கிறார்.

அருள் தாஸை சார்லஸ் வினோத் கொலை செய்தாரா? இல்லையா? பார்வதி பார் சார்லஸ் வினோத்திற்கு கிடைத்ததா? இல்லையா? வீரனும் ரேஷ்மாவும் சேர்ந்தார்களே? இல்லையா? என்பதே சாலா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இணை தயாரிப்பு : விவேக் குச்சிபோட்லா கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : வி. ஸ்ரீ நட்ராஜ் நிர்வாகத் தயாரிப்பாளர் : விஜய ராஜேஷ் ஒளிப்பதிவு : ரவீந்திரநாத் குரு இசையமைப்பாளர் : தீசன்
ஆசிரியர் : புவன்
கலை இயக்குனர் : வைரபாலன்
ஸ்டண்ட் : மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர்ராம்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.