சாவி விமர்சனம்

ஆண்டனி அஜித் இயக்கத்தில், உதயா தீப், ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே, சேஷாத்திரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாவி. 

உதயா தீப் தன்னுடைய மாமன் மகள் கவிதா சுரேஷ் காதலிகிறார், கவிதாவும் உதயாவை காதலிக்கிறார். கவிதாவின் அப்பாவாக வரும் பிரேம்கே சேஷாத்திரிக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. அதனால் கவிதாவிற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக தன்னுடைய தங்கை வீட்டில் சொல்லிவிட்டு செல்கிறார். 

ஒரு நாள் விபத்தில் கவிதாவின் அப்பாவான பிரேம் கே. சேஷாத்திரி இறந்து விடுகிறார்.

வீட்டில் அவரது உடலை இறுதி காரியம் செய்வதற்காக வைத்திருக்கின்றனர். இரவில் அனைவரும் தூங்கி விடுவதால் உதயாவிடமும் உதயாவின் இன்னொரு மாமாவின் மகனிடமும் உடலை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை கொடுக்கின்றனர். 

உதயா சிறிது கண் அசந்து விட, உடலை யாரோ எடுத்து சென்று விடுகின்றனர். சிறிது நேரத்தில் இறந்தவர் உடலை காணவில்லை என்றதும் எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். 

உறவினர்கள் அனைவரும் உதயா தான் ஏதோ செய்து விட்டான் என்று அவனை சந்தேகப்படுகின்றனர். போலீஸிடம் தகவல் தெரிவிக்க போலீசாக வரும் ஆதேஷ் பாலா அதனை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

ஆதேஷ் பாலா அந்த உடலை கண்டுபிடித்தாரா? இல்லையா? அந்த உடலை உதயா எடுத்திருந்தால் அதற்கான காரணம் என்ன? உதயாவும் கவிதாவும் திருமணம் செய்தார்களா? இல்லையா? என்பதே சாவி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : ஆண்டனி அஜித் ஒளிப்பதிவு : பூபதி வெங்கடாசலம்

இசை : சரண் ராகவன் & வி.ஜே ரகுராம் 

தயாரிப்பு : ஆண்டனி அஜித் ப்ரொடக்ஷன் 

மக்கள் தொடர்பு : மணிமதன்