இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார். வெளியிட்ட பிறகு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்து குறித்து இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது “எஸ்.ஏ.சி.சார் துணிச்சலான பெரும் புகழ் பெற்ற இயக்குநர். அவர் எங்களை வாழ்த்தியது ஆரே்வதித்தது எங்கள் படக்குழுவிற்கே பெரும் பலம் கிடைத்த உணர்வைத் தருகிறது.” என்கிறார்.
நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி .கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சிவநக், பாடல்கள் கபிலன் மணி அமுதன், ப்ரியன், எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.