குஜராத்தில் பெய்த கனமழையால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார். 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது பனாஸ்காந்தா மாவட்டம், லால் சவுக் பகுதியில் ராகுல் வருகையை கண்டித்து சிலர் கறுப்பு கொடிகளை காட்டி கோஷமிட்டனர் இந்நிலையில் அங்கிருந்து ராகுல் காந்தி காரில் புறப்பட்டார்.
சிறிது தொலைவில் அவரது காரை குறிவைத்து கற்கள் வீசப்பட்டன. இதில் காரின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக ராகுல் காயமின்றி தப்பினார். அவரது பாதுகாவலர்களில் ஒருவர் காயமடைந்தார். இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி குஜராத்தில் எனது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது பாஜக, ஆர்எஸ்எஸ்., ஆதரவாளர்களே. இதுதான் மோடி அரசியல். இது அவர்களுடைய கட்சிக்காரர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்க முடியாது” என்றார்.