Rowdy Pictures சார்பில், விக்னேஷ் சிவன் வழங்கும், மாயா படப்புகழ் இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில், லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா  நடிக்கும் திரைப்படம் “Connect”

லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா தொட்டதெல்லாம் பொன்னாகும் பெருமைக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியின் பொன்மகுடத்தை  சூடி வருகின்றன. பல வித்தியாசமான களங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் தோன்றி நடிப்பது மூலம், தொடர் வெற்றிப்படங்களை தருவது,  நயன்தாரா அவர்களின் வழக்கமாக மாறிவிட்டது. அவரது மாறுபட்ட முயற்சிகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் இதன் மூலம் இந்தியாவில் நாயகியை முதன்மை பாத்திரமாக வைத்து உருவாகும் படைப்புகளுக்கு முன்னோடியான பாதையை வகுத்தவராகவும் அவர்  விளங்குகிறார்.

நயன்தாரா திரைவாழ்வில் மைல்கல்லாக அமைந்த இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான “மாயா” படம்,  நயன்தராவின் அற்புதமான நடிப்பிற்காகவும், அழுத்தமான கதைக்காகவும் பரபர திரைக்கதைக்காகவும் பெரும் புகழ் பெற்றது. இந்த வெற்றிக்கூட்டணியான நயன்தாரா மற்றும் இயக்குநர் அஷ்வின் சரவணன்  மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். “Connect” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை Rowdy Pictures சார்பில், விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர். பரபர தருணங்கள் நிறைந்த ஹாரர் திரில்லராக உருவாகவுள்ள இப்படம் ரசிகர்களுக்கு புத்தம் புதிய சினிமா அனுபவத்தை தரும். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள்  பலர் இப்படத்தில் பங்குகொள்கிறார்கள். பாலிவுட் பிரபலமான  அனுபம் கெர், நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்

தமிழ் சினிமா இயக்குநர்களில்  நம்பிக்கையூட்டும் திறமைசாலிகளில் ஒருவராக தன் இடத்தை பதிவு செய்திருக்கும் அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும் காவ்யா ராம்குமாருடன் இணைந்து கதையும் எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பைக் கையாள்கிறார். கலை இயக்கத்தை ஸ்ரீராமன் & சிவசங்கர் கவனிக்கின்றனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் M (Sync Cinema) ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்கின்றனர். ராஜகிருஷ்ணன் M.R (சவுண்ட் மிக்ஸ்), “ரியல்” சதீஷ் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் & கவிதா J (ஆடைகள்), சிதம்பரம் (மேக்கப்), சினேகா மனோஜ், அஸ்தா பிசானி (புரோஸ்தெடிக் கலைஞர்கள்), Realworks Studios (VFX), வர்ஷா வரதராஜன் (நடிகர் தேர்வு), கோமளம் ரஞ்சித் (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனர்) தொழில்நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். சுரேஷ் சந்திரா – ரேகா  D one  (மக்கள் தொடர்பு), Ra. சிபி மாரப்பன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), குபேந்திரன் V.K (அசோஸியேட் புரடியூசர்), மயில்வாகனன் K.S (இணைத் தயாரிப்பாளர்).