சீரியஸ் கேரக்ட்டரில் நடித்து வந்த நடிகர் விஜய் ஆண்டனி, ’காளி’ படத்தின் மூலம் ரொமான்ஸ் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். காதல் காட்சிகளில் நடிகை அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.
’அண்ணா துரை’படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள படம்’காளி’. இப்படத்தை அவரின் மனைவி பாத்திமா தயாரித்து, கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். இதில், விஜய் ஆண்டனிக்கு ஜோடிகளாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் மே 18 வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் குறித்து விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி கூறிகையில், ”பொதுவாக நான், எல்லா படத்திலும் ஹீரோயின்களை தொடாமல்,நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் சொல்கிறார்கள். அது உண்மைதான். ஆனால், இப்போது அதை மாற்றிக் கொண்டுவிட்டேன். நடிப்பு என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
இந்தப் படத்தில் அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். அவருக்கும், எனக்கும் நிறைய காதல் காட்சிகள் இருக்கிறது. இந்தப் படம் என் இமேஜை மாற்றும். இந்தப் படத்திலிருந்து ரொமான்ஸ் ரூட்டுக்கு மாறுகிறேன்” என்றார்.