ராபர் விமர்சனம் 3/5

கவிதா & ஆனந்த கிருஷ்ணன் தயாரிப்பில், ஆனந்த கிருஷ்ணன் கதை, வசனத்தில், எஸ் எம் பாண்டி இயக்கத்தில், சத்யா, டேனியல் அனி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், பாண்டியன், சென்ராயன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ”ராபர்”

கிராமத்தில் சின்ன சின்ன ராபரி (திருட்டு) வேலைகளை செய்து வந்த நாயகன் சத்யா, பிபிஓ வேலைக்காக சென்னை வருகிறார்.

சத்யாவின் அம்மாவாக வரும் தீபா சங்கர் மகனின் மீது அளவை கடந்த பாசத்தையும், அக்கறையும் காட்டுகிறார்.

பிபிஓவில் வேலை பார்க்கும் சத்யாவிற்கு ஜாலியாகவும், உல்லாசமாகவும், இருப்பதற்கு வாங்கும் சம்பளம் பத்தாததால் சென்னையில் ராபரி வேலையை ஆரம்பிக்கிறார்.

காலையில் தன்னுடைய அலுவலக பணியை முடித்துவிட்டு மாலையில் தனியாக செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நகை, பணம் பறிப்பது, வழிப்பறி செய்வது போன்ற ராபெரி வேலையை செய்கிறார். இப்படி வழிப்பறி செய்யும் நகைகளை விற்று பணம் வாங்கி வருகிறார்.

அந்த நபர் ஒரு நாள் இறந்து விட, அந்த நகைகளை விற்க வேறு ஒருவரை தேடி கொண்டிருக்கிறார். 

அப்போது, திருட்டு நகை வாங்கி தொழில் செய்யும் டேனியல் அனி போப் மற்றும் அவரின் குழுவின் தொடர்பு கிடைக்க, அவர்களிடம் நகைகளை விற்கத் ஆரம்பிக்கிறார் சத்யா.

ஒரு கட்டத்தில் சத்யவிற்க்கும், டேனியலுக்கும் இடையே ஒரு பெரும் மறைமுக மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே ராபர் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : எஸ் எம் பாண்டி

ஒளிப்பதிவு : உதயகுமார்

இசை : ஜோகன்

தயாரிப்பு : கவிதா & ஆனந்த கிருஷ்ணன்