“ஏஜென்ட் கண்ணாயிரம்” படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகை ரியா சுமன்

 
நடிகை ரியா சுமன் தமிழ் திரையுலகில் நடிகர்  ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் மூலம்,  தன் திரைப்பயணத்தை துவங்கினார்.  தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் நாயகியாகவும் மற்றும்  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும்  ‘மன்மத லீலை’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான  இந்த இரண்டு படங்களிலும்  ஒரு பகுதியாக பங்குகொண்டு  இருப்பதில், அவரது திறனை வெளிப்படுத்த அருமையான  வாய்ப்பை இந்த படங்கள் வழங்கியுள்ளதில், அவர் வெகு உற்சாகமாக இருக்கிறார்.
 
ஏஜெண்ட் ஸ்ரீவஸ்தவா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவலாக உருவாகும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்காக இயக்குநர் மனோஜ் பீதா தன்னை அணுகியபோது, அதன் அசல் பதிப்பைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்றும், ஏனெனில் அந்த பாத்திரத்தின் தாக்கம் தன்னுள் ஏற்படுவதை விரும்பவில்லை என்று நடிகை கூறியுள்ளார், கிட்டத்தட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு,  அசல் பதிப்பை பார்த்த போது,  துப்பறியும் நபரின் உதவியாளராக இருக்கும்  கதாபாத்திர தன்மையை தவிர, அசல் பாத்திரத்திற்கும், இந்தப்பட பாத்திரத்திற்கு எந்த ஒற்றுமையும் இல்லை என்று கூறுகிறார்.
 

படப்பிடிப்பில் சந்தானம்  மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் பழகினார், எங்கள் இருவருக்கும் இடையில்  ஆன்மீகம் பொதுவான ஈர்ப்பாக இருந்தது என கூறியுள்ளார். மேலும்  மன்மத லீலை படத்தில் தனது அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும்போது…, 2-3 டேக்குகளுக்குள் நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை பெற்று பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. மன்மத லீலை கதை இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது – கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், என அமைந்த கதையில் நிகழ்காலத்தில் நான்  தோன்றுகிறேன் என்றார்.

நடிகை ரியா சுமன்  ஏற்கனவே ஓரிரு தெலுங்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் ஒப்பந்தமாகியுள்ள சில தமிழ் படங்கள்  இந்த ஆண்டு முழுவதும் பிஸியாக வைத்திருக்கும் என்றும் வெகு மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.