M S பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்கதுரை, மதுரை சுஜாதா ஆகியோருடன் மேலும் பலர் இப்படத்தில் இணைகிறார்கள். எல்லாதரப்பையும் கவரும் பல தரப்பட்ட நட்சத்திரங்கள் இணைவது படத்தின் வெற்றியை உறுதி செய்வதுடன் 90 கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் என இரு சந்ததியையும் ஒருங்கே கவரும் என்பதை அழுத்தி சொல்கிறது.
தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், L சிந்தன் Positive Print Studios சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அவர்கள் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் இருக்கும் அதீத அழுத்தமிக்க மனநிலையிலிருந்து விடுதலை பெற, பொழுதுபோக்க காமெடி படங்களே அருமருந்து என நம்புகிறார்கள். முழுமையான காமெடி என முடிவான பிறகு A C கருணாமூர்த்தி மிக அழகான கதையை தந்துள்ளார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் காமெடி தெறிக்கும் பரபர திரைக்கதையை உருவாக்கியுள்ளார். புன்னகை தவழும் வசனங்களை எழுதியுள்ளார் RK. தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், L சிந்தன் படத்தின் படப்பிடிப்பை மிக நேர்த்தியாக திட்டமிட்டுள்ளார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளங்களை கொள்ளை கொள்ளும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக முழு காமெடி படத்திற்கு அவர் இசையமைக்கவுள்ளார். B ராஜசேஜர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் RDX எடிட்டிங் செய்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைப்பயிற்சியை கவனிக்க, சரவணன் கலை இயக்கம் செய்கிறார்.