ஜோதிகா சூர்யா தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ், சுஜித்சங்கர், சுவாசிகா, விது அவினாஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரெட்ரோ.
ஜோ ஜு ஜார்ஜும் அவரது மனைவியும் புத்தர் கோயிலுக்கு செல்லும்போது அங்கு ஒரு குழந்தை அனாதையாக இருக்க அந்த குழந்தையை எடுத்து வளர்க்கின்றனர். அந்த குழந்தையின் மீது அதிக பாசத்துடன் இருக்கிறார் ஜோ ஜு ஜார்ஜ்வின் மனைவி. ஆனால் அந்த குழந்தையை மகனாக ஏற்றுக் கொள்ளவில்லை ஜோ ஜு ஜார்ஜ். அந்த குழந்தையை தான் நாயகன் சூர்யா.
சூர்யாவை அடியாள் போல் வளர்த்து வருகிறார். ஜோ ஜு ஜார்ஜால் கடத்தப்படும் தங்க மீன்கள் என்று கருதப்படும் ஒரு பொருளை கடத்தி ஜோ ஜு ஜார்ஜிக்கு தெரியாமல் மறைத்து வைக்கிறார் சூர்யா.
அதனை சூர்யாவிடம் இருந்து வாங்க வேண்டும் என்று சூர்யாவின் காதலியான பூஜா ஹெக்டேவை கொள்ள முயற்சி செய்ய அந்த சூழ்நிலையில் ஜோ ஜு ஜார்ஜின் கையை வெட்டி விடுகிறார் சூர்யா.
இதனால் சூர்யாவை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. சூர்யாவின் காதலியான பூஜா ஹெக்டேவும் மனம் உடைந்து சூர்யாவை விட்டு பிரிந்து வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.
பூஜாவை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய கோபத்தை எல்லாம் அடக்கி சிரிப்பு டாக்டர் ஆக மாறி பூஜாவை கண்டுபிடிக்கிறார்.
ஆனால் சூர்யாவை சூழ்நிலை மீண்டும் அதே கோபக்காரனாக மாற்றுகிறது. அதன் பிறகு பல எதிர்பாராத திருப்பங்கள் நடக்கிறது.
சூர்யாவும் பூஜாவும் சேர்ந்தார்களா? இல்லையா? ஜோஜு ஜார்ஜ் தன் கையை வெட்டியதற்காக சூர்யாவை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே ரெட்ரோ படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு: ஜோதிகா சூர்யா
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ்யாஸ் கிருஷ்ணா
இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்
ரிலீஸ்: சக்தி பிலிம். ஃபேக்டரி
பி ஆர் ஒ,: யுவராஜ், சதீஷ் S2

