தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா. அவர், ‘விவேகம்’ படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். ‘விவேகம்’ விரைவில் திரைக்கு வர உள்ளது. அக்ஷரா தனது முதல் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தற்பொழுது அவர் புத்த மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதை அறிந்த கமல்ஹாசன் தனது மகளிடம் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கேட்டிருக்கிறார். “அக்ஷரா மதம் மாறிவிட்டாயா? அப்படி மாறியிருந்தாலும் என் அன்பு மாறாது! மதம் போன்று இல்லாமல் அன்பு நிபந்தனையற்றது. வாழ்க்கையை அனுபவி. வித் லவ்- உன் தந்தை!” என்று ட்வீட் செய்துள்ளார் கமல்.
இதற்கு மகள் அக்ஷரா, “பாபுஜி. நான் புத்த மத போதனைகளை ஏற்றுக் கொண்டாலும் மதம் மாறவில்லை! இன்னும் நாத்திகவாதி தான்!” என டிவிட்டர் வாயிலாகவே கமலுக்கு பதில் அளித்துள்ளார்.