காவலர் உடற்தகுதி தேர்வில் திருநங்கை நிராகரிப்பு

காவலர் உடற்தகுதி தேர்வில் திருநங்கை நிராகரிப்பு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சீருடை பணி தேர்வாணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஜெகதீஸ்வரன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், காவலர் உடற்தகுதித் தேர்வில் தான் திருநங்கைக்கான சான்றிதழ் கொண்டு செல்லாததால் இரண்டு நாள் கழித்து எடுத்து வருமாறு தேர்வாணைய அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாகவும், அதன்படி இரண்டு நாள் கழித்து சென்ற போது காரணமில்லாமல் தன்னை நிராகரித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தனக்கு போதிய உடற்தகுதி இருந்தும் நிராகரித்ததாக கூறினார். இது குறித்து விளக்கமளிக்க சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.