ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் “சூர்ப்பனகை” திரைப்படம் அதன் தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றால், ரசிகர்கர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. சமீபத்திய வெற்றிபடங்கள் மூலம் இந்திய அளவில் ரசிகர்கர்களை பெற்றுள்ள, நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு , முழுமையாக முடிவடைந்ததாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் ராஜு கூறியதாவது…
“சூர்ப்பனகை” படத்தின் முழுப்படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம், விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். சூர்ப்பனகை படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம் மற்றும் நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றார்.

Apple Tree Studios சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். சாம் CS இசையமைக்கிறார், கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு படத்தொகுப்பு செய்துள்ளார் சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் நடிகை ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.