ராஜேஷ்குமாரின் நாவலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தினகரன் இயக்கத்தில், பாலா ஹாசன், பவித்ரா ஜனனி, சந்தியா, வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ், இந்திரஜித், ஸ்ரீராம், பூபாலன் பிரகதீஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள வெப் சீரிஸ் ரேகை.
நாயகன் பாலா ஹாசன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கிறார். பவித்ரா ஏட்டாக இருக்கிறார். காவல் நிலையத்தில், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசாக கல்லூரி மாணவர் ஒருவரை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்திருக்கிறார் பாலா.
அந்த நபர் விடுதியில் இருக்கும் பாத்ரூமில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இது பாலாவிற்கு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த சூழ்நிலையில் பாலா ட்ரை சைக்கிள் செல்லும் ஒருவரை சந்தேகப்பட்டு பின் தொடர்கிறார். அப்படி செல்லும்போது அந்த நபர் கீழே விழுந்து இறந்து விடுகிறார். அந்த சைக்கிளை கைப்பற்றி சோதிக்கும் பொழுது அதில் வெட்டப்பட்ட கைகள் இருக்கிறது.
அதனை பரிசோதனைக்கு அனுப்பும் பாலா அந்த கையில் இருக்கும் ரேகையை வைத்து யார் இந்த நபர் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அந்த ரேகை 4 நபர்களுடன் ஒத்துப் போகிறது அந்த நால்வரும் இறந்துவிட்டதும் அதில் மூன்று பேர் ஒரே நாளில் இறந்ததும் பாலாவிற்கு தெரிய வருகிறது.
இதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று நினைக்கும் பாலா அதனை தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
அந்த நான்கு பேர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? அதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்? நான்கு பேருக்கும் எப்படி ஒரே கைரேகை வந்தது? என்ற பல கேள்விகளுக்கும் விடையே ரேகை வெப் சீரிஸோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : எம் தினகரன்
தயாரிப்பு : எஸ் சிங்காரவேலன்
இசை : ஆர் எஸ் ராஜ் பிரதீப்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

