K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், நிகேஷ் ஆர் எஸ் இயக்கத்தில், ஜீ.வி பிரகாஷ் குமார், மமீதா பைஜூ, சுப்பிரமணிய சிவா, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ் விபி, ஷாலுரஹீம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரெபல்.
கேரளாவில் இருக்கும் மூணார் பகுதியில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வரும் தமிழ் மக்கள் தங்களைப் போல தங்களுடைய பிள்ளைகளும் கஷ்ட்டப்படாமல், அவர்களின் வாழ்க்கை மாற வேண்டும் என்று நினைக்குகிறார்கள்.
அதற்காக அவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக தங்கள் பிள்ளைகள் படித்தால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் அது மட்டுமில்லாமல் நம் வாழ்க்கையும் மாறிவிடும் என்ற நம்பி கல்லூரி படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள்.
ஆனால் அந்தக் கல்லூரியில் சக மாணவர்களான மலையாள மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் கூட தமிழ் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை அது மட்டும் இல்லாமல் அங்கு இருக்கும் இரண்டு மாணவர் அணிகள் தமிழ் மாணவர்களை ராகிங் என்ற பெயரில் பலவித கொடுமைகளுக்கு ஆளாக்குகிறார்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்.
ஒரு சமயத்தில் இவர்களின் செயல்களால் பாதிக்கப்படும் கதாநாயகன் ஜி.வி பிரகாஷ் பொறுமை இழந்து புரட்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள் அதற்காக ஒரு புதிய அமைப்பையும் ஏற்படுகிறார்கள்.
இந்த அமைப்பின் மூலம் தமிழ் மாணவர்களுக்கு நன்மை நடந்ததா? இல்லையா? அவர்களால் சரியாக படிக்க முடிந்ததா? இல்லையா? அவர்களின் மீதான அடக்குமுறை முடிவுக்கு வந்ததா? இல்லையா? மற்ற மாணவர்கள் அவர்களின் நிலையை புரிந்து கொண்டார்களா? இல்லையா? என்பதை ரெபல் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : நிகேஷ்
ஒளிப்பதிவு : அருண் ராதாகிருஷ்ணன்
இசை : ஜீ.வி.பிரகாஷ் குமார்
படத்தொகுப்பு : வெற்றி கிருஷ்ணன்
தயாரிப்பு : K.E ஞானவேல் ராஜா
இணை தயாரிப்பு : நேகா ஞானவேல் ராஜா
வெளியீடு : சக்தி பிலிம் பேக்டரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்