ராயர் பரம்பரை விமர்சனம்

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், ராம்நாத்.டி இயக்கத்தில், கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகன், கிருத்திகா, அன்ஷலா ஜிதேஷ் தவான், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேசு, மிப்பு, தங்கதுரை, கல்லூரி வினோத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராயர் பரம்பரை.

ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. அதனால் மொட்டை ராஜேந்திரன் வைத்து தனது ஊரில் யார் காதலித்தாலும் அவர்களை பிரிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வருகிறார்.

அந்த ஊருக்கு வரும் கதாநாயகன் கிருஷ்ணாவை, கதாநாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அனுஷா தவான் காதலிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய காதலை கிருஷ்ணா ஏற்க மறுக்கிறார். தனது மகள் சரண்யாவை கிருஷ்ணா காதலிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய ராயர் முடிவு செய்கிறார். கிருஷ்ணா உண்மையிலேயே ராயர் மகளை காதலித்தாரா? இல்லையா? ராயரிடமிருந்து தப்பித்தாரா? என்பதே ராயர் பரம்பரை படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட் கலைஞர்கள்

ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு

இசை : கணேஷ் ராகவேந்திரா

எடிட்டர் : சசி குமார்

கலை : ராகவ குமார்

ஸ்டண்ட் : சூப்பர் சுப்பராயன்

பாடலாசிரியர் : மோகன் ராஜா

நடனம் : சாண்டி, ஸ்ரீசிவா, சங்கர், ஸ்ரீ செல்வி

ஆடை : ரங்கசாமி

ஒப்பனை : ஆர்.கே.ராம கிருஷ்ணன்

தயாரிப்பு மேலாளர் : ரகு

நிர்வாகத் தயாரிப்பாளர் : ஆர்.எஸ்.மணிகண்டன்

மக்கள் தொடர்பு : எய்ம் சதீஷ்.