ரத்தம் விமர்சனம்

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் – கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி. பிரதீப் ஆகியோர் தயாரிப்பில், சி எஸ் அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி, கலைராணி, ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ரத்தம்’.

உலக அளவில் புகழ் பெற்ற புலனாய்வு நிருபரான விஜய் ஆண்டனி, தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், அந்த வேலையில் இருந்து விலகி, தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். குடிக்கும் அடிமையாக இருக்கிறார்.

இந்த நிலையில், அவரது நண்பரான வானம் பத்திரிகையின் ஆசிரியர், அலுவலகத்திலேயே அனைவரின் முன்னிலையிலும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதை அறிந்த விஜய் ஆண்டனி மீண்டும் பத்திரிகையாளராக பணியாற்ற தொடங்குகிறார். நண்பனின் கொலை நடிகரின் வெறித்தனமான ரசிகரால் செய்யப்பட்டது என்று அனைவரும் நம்புகிறார்கள், ஆனால் விஜய் ஆண்டனிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

அதனால், அந்த கொலையில் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி, தனது நண்பர் மட்டுமில்லாமல் மேலும் சிலரும் இதே முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த கொலைகளின் பின்னணியில் மிகப்பெரிய நெட் ஒர்க் கும்பல் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். அந்த நெட் ஒர்க் கும்பல் யார்? செய்யப்பட்ட நபர்களுக்கும் இந்த நெட்வொர்க்குக்கும் என்ன தொடர்பு? என்பதை கண்டுபிடிப்பதே ‘ரத்தம்’. மீதி கதை

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் – கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி. பிரதீப்

இயக்கம் : சி.எஸ்.அமுதன்

இசை : கண்ணன் நாராயணன்

படத்தொகுப்பு : டி.எஸ்.சுரேஷ்

கலை இயக்குநர் : செந்தில் ராகவன்

ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்