நமது கலாச்சாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகின்றது. உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானை பொங்கல் வைத்து வழிபடுகிறோம். அதனைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடு தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் வருகின்றது. அது தான் ரதசப்தமி. ரதசப்தமி அன்று தான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்
உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்று கருதப்படுகின்றது.
ரதசப்தமி நாளன்று எருக்க இலை வைத்து ஸ்நானம் செய்து பின் சூரியனை வழிபடுவதன் மூலம் நீடித்த ஆயுளும் உடல் நலமும் பெறலாம். இந்த சூரிய வழிபாட்டின் மூலம் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன் பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து அருள்கிறார். நீடித்த ஆயுள், இளமை, உயர்ந்த அறிவு, நிறைந்த செல்வம்,
சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்வை அருள்கிறார்.
உலகின் இருள் நீக்கி ஒளி தரும் சூரிய பகவானின் அருளை அனைவரும் பெறுவதற்கு சூரிய ஜெயந்தியான ரதசப்தமி அன்று ISO 9001: 2015 தரச் சான்று பெற்ற AstroVed நிறுவனம் பிரம்மாண்டமான ஹோமம் மற்றும் வேத பாராயணம் நடத்த உள்ளது.
அருண பாராயணம் எனப்படும் சூரிய நமஸ்கார மந்திர உச்சாடனம். தைத்ரீய ஆரண்யக என்னும் கிருஷ்ண யஜுர் வேத நூலின் 32 பத்திகளைக் கொண்ட 135 பாசுரங்களின் பாராயணம். இதனைத் தொடர்ந்து த்ருச பாஸ்கர ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தின் பொழுது 3 ரிக் வேத மந்திரங்கள் சேர்ந்த சிறப்பு மந்திரம் ஓதப்படும். மிகவும் அரிதான இந்த ஹோமத்தில் பங்கு பெறுவதன் மூலம் சூரிய பகவானின் அருள் பெற்று கீழ் கண்ட பலன்கள் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது:
- பாவங்கள் கரையும்
- கவலை, துக்கம், வேதனை ஆகியவற்றை நீக்கும்
- நோய்கள் அகலும் அதிலும் குறிப்பாக இதயம் தொடர்பான நோய்கள்
- தீய சக்திகள் விலகும்.
- சூரியனார் கோவிலில் 1௦ நாள் சிறப்பு அர்ச்சனை வழபாடு:-
- கிரஹ தோஷங்கள் நீக்கும்.
- ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும்
- தசா புக்தி தோஷம் நீக்கும்
- அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கச் செய்யும்.
- இருள் நீக்கி ஒளி கூட்டும் சூரிய பகவானின் அருளைப் பெற அனைவரையும் பங்கு
கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.