14வது குடியரசு தலைவராகிறார் ராம்நாத் கோவிந்த்

Adida Melam Movie

நாட்டில் நடைபெற்ற குடியரசு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் 64.65 சதவிகித வாக்குகளும், மீராகுமார் 34.35 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 77 வாக்குகள் செல்லாதவையாகும். ராம்நாத் கோவிந்த் வருகின்ற 25ஆம் தேதி குடியரசு தலைவராக பதவியேற்கிறார்.

முன்னதாக தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது செய்தியாளர்களிடம் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், என்னை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி எனக்கு வாக்களித்த ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நான் தேர்தெடுக்கப்பட்டுள்ள பதவியின் மாண்பினை காக்கும் வகையில் செயல்படுவேன் என உறுதியளிக்கிறேன். என்னோடு போட்டியிட்ட திருமதி மீராகுமாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.