’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ விமர்சனம்

சூழ்ச்சியின் காரணமாக அயோத்தின் அரசனாக பதவி ஏற்றி இருக்க வேண்டிய ராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்கிறார். அவருடன் அவருடைய தம்பி லட்சுமணனும் மனைவி சீதையும் செல்கிறார்கள்.

சீதையின் அழகில் மயங்கி இராவணன் சீதையை கடத்திச் சென்று விடுகிறான் கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்காக செல்லும் ராமன் வானரப் படைகளின் உதவியோடு ராவணனை வீழ்த்தி அங்கு இருக்கும் சீதையை மீட்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அங்கு அடிமையாக இருக்கும் பலரையும் மீட்கிறார் என்று ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறியவர்களுக்கும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் புரியும்படியும் ரசிக்கும்படியும் அழகாக சொல்லி இருப்பதே ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’

அனிமேஷன் தொழில்நுட்பம் கொண்டாலும், படத்தின் வண்ணங்களும் காட்சிகளும் குழந்தைகளை கவரும்படி அழகாக உள்ளன. கதை சொல்லிய விதமும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புரியும்படியும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.