ராமம் ராகவம் – விமர்சனம்

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனி, தனராஜ், பிரமோதினி, மோக்ஷா, சுனில், சத்யா, பாலிரெட்டி பிருத்துவிராஜ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராமம் ராகவம்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் நேர்மையான அதிகாரியாக இருக்கிறார் சமுத்திரக்கனி அவரின் மனைவியாக பிரமோதினி வருகிறார் இவர்களின் மகனாக தன்ராஜ் கொரனானி.

சிறிய வயதிலிருந்தே தன்னுடைய மகன் மீது மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார்.  நல்லவிதமாக வளர்த்து நன்றாக ஆளாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரும் ஒரு நேர்மையான அதிகாரியாக யாரிடத்திலும் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியாக வாழ்ந்து வருகிறார்.

மகனான தன்ராஜ் பள்ளி படிக்கும்போதே‌ சிகரெட் பிடித்து கொண்டும், சூதாட்டம் ஆடிக் கொண்டும், ஊரை சுற்றிக் கொண்டும் திரிகிறார்.

ஒரு நாள் இல்லை ஒரு நாள் தன் மகன் திருந்தி விடுவான் என்று நினைக்கிறார் சமுத்திரகனி.

சூதாட்டம் ஆடி பணத்தை இழக்கிறார். பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்த்து விட அங்கேயும் போர்ஜரி செய்து அங்கேயும் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். இப்படி திருந்தாமல் ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கும் தன்ராஜ் ஒரு கட்டத்தில் அப்பாவையே கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்பிறகு அப்பாவை‌ கொலை செய்தாரா? இல்லையா? அவருடைய சொத்துக்கள் எல்லாம் தன்ராஜ்க்கு கிடைத்ததா? இல்லையா? தன்ராஜ் திருந்தினாரா? இல்லையா?  என்பதே ராமம் ராகவம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : அருண்சிலுவேறு

ஒளிப்பதிவு : துர்கா கொல்லிபிரசாத்

பாடல்கள் : யுகபாரதி, முருகன்மந்திரம்

திரைக்கதை இயக்கம் : தன்ராஜ் கொரனானி

பேனர் : ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பிரபாகர் ஆரிபாக 

தயாரிப்பு : ப்ருத்வி போலவரபு

வெளியிடு :  GRR Movies 

மக்கள் தொடர்பு : குணா

ரேட்டிங் : 4/5