ராம் அப்துல்லா ஆண்டனி‌ விமர்சனம்

ஜெயவேல் இயக்கத்தில், சௌந்தர்ராஜா, தீனா, வேல ராமமூர்த்தி, பூவையார், அர்ஜுன், அஜய், ஜாவா சுந்தரேசன், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராம் அப்துல்லா ஆண்டனி.

சிறு வயது முதலே பூவையார், அர்ஜுன், அஜய் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் ஒரு அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். ஒரு சிறுவனை கடத்தி கொலை செய்து விடுகின்றனர் இந்த மூவரும். 

கடத்தி கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாத்தாவான வேல ராமமூர்த்தி தன்னுடைய பேரனின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் இடம் புகார் அளிக்கிறார். 

போலீஸ் ஆன தீனா இவர்கள் மூன்று பேரையும் என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார். 

தீனா அவர்களை கைது செய்தாரா? என்கவுண்டர் செய்தாரா? இவர்கள் மூன்று பேரும் அந்த சிறுவனை கடத்திக் கொலை செய்ய காரணம் என்ன? என்பதே ராம் அப்துல்லா ஆண்டனி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் 

இயக்கம் : ஜெயவேல் 

ஒளிப்பதிவு : எஸ்.கே. விஜய் 

இசை : டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் 

மக்கள் தொடர்பு : ஜான்சன்