ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் பிரமாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.O. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருவதால் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாகவிருந்த இப்படம் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கிராபிக்ஸ் மற்றும் இசை பணிகள் இன்னும் முழுமையடையாததால் படம் வெளியாவதில் மீண்டும் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது. தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் உருவாகிவரும் Padman திரைப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைவைத்து பார்க்கும்போது 2.O ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் சம்மரில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.