ரஜினிகாந்தின் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. 

காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வாட்டாள் நாகராஜ் தற்போது விடுத்து இருந்த அறிக்கை ஒன்றில் “சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும் காலா படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்” என கூறி இருந்தார்.

தற்போது கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் காலா படத்திற்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநில நலன் கருதி காலா படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறி உள்ளது.