ரஜினி கேங் விமர்சனம்

ரமேஷ் பாரதி இயக்கத்தில், ரஜினி கிஷன், திவிவிகா, முனிஸ்காந்த், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், கல்கி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரஜினி கேங்.

நாயகன் ரஜினி கிஷன் ரஜினி ஆடியோ செட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ரஜினி கிஷனும் நாயகி திவிவிகாவும் காதலிக்கிறார்கள். இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஓடி செல்ல திட்டமிடுகிறார்கள். 

ஒரு திருவிழாவில் ரஜினி கிஷனால் இந்த விஷயம் ஊருக்கே தெரிய வருகிறது. ஊர் மக்கள் அனைவரும் இருவரையும் பிடிக்கவிரட்டுகிறது.  அந்த சமயத்தில் முனிஸ்காந்த் அவருடைய காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடனாக வரும் கல்கியும் அந்த காரில் லிப்ட் கேட்டு பயணிக்கிறார். 

திவிவிக்காவின் முறை மாமாவாக வரும் கூல் சுரேஷ் அவர்கள் சென்ற ஊரில் வருகிறார். 

இந்த சமயத்தில், அங்கு ரஜினி கிஷனுக்கும் திவிவிகாக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு புதிய களம் உருவாகிறது. அது என்ன களம்? இவர்களின் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனை என்ன? அது சரி செய்யப்பட்டதா? இல்லையா? என்பதை காமெடியாகவும் கொஞ்சம் அமானுஷ்யத்துடனும் சொல்லியுல்ல படமே ரஜினிகேங்.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ரமேஷ் பாரதி

தயாரிப்பு : சி.எஸ். பத்மசந்த் & சி. அரியந்த் ராஜ் & ரஜினி கிஷன் 

தயாரிப்பு நிறுவனம் : மிஸ்ரி என்டர்பிரைசஸ் 

இசை : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் 

ஒளிப்பதிவு : என்‌.எஸ் சதீஷ்குமார்

படத்தொகுப்பு : ஆர்.கே வினோத் கண்ணா 

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)