“ராஜாவுக்கு செக்” படக்குழு மீண்டும் பணிகளை துவங்கியது

“ராஜாவுக்கு செக்” படக்குழு மீண்டும் பணிகளை துவங்கியது  

தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்த படத்தை பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாக சொல்கிறார்கள். 

மலையாள திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க காலடி எடுத்து வைத்திருக்கிறோம். ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் சேரன் அவர்களை மிகவும் வியந்து பார்க்கிறோம். சினிமாவை அதிகம் பார்க்கும் நடுத்தர குடும்ப மக்களிடம் சேரன் சார் மிக சிறப்பாக சென்று சேர்ந்துள்ளார். எங்கள் இயக்குனர் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் மழை படத்தையும், தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில்ராஜு மற்றும் பூரி ஜெகன்நாத் தயாரிப்பில் ஹலோ ப்ரேமிஸ்தாரா படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இந்த படங்களை ராஜ்குமார் என்ற பெயரில் இயக்கியவர் தற்போது சாய் ராஜ்குமார் என்று தன் பெயரை மாற்றியிருக்கிறார். அவரின் படங்களை பார்த்து, அவர் திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். ராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும், திரைக்கதையோடு சரியான புள்ளியில் இணையும். சேரன் சார் குடும்ப கதைகளில் நடித்தவர், சாய் ராஜ்குமார் தமிழில் ஆக்‌ஷன், தெலுங்கில் த்ரில்லர் படத்தையும் இயக்கியவர், இவர்கள் இருவரும் இணைவதே ஆச்சர்யத்தை உருவாக்கும். சேரன் சாரை இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள், ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமையும். படப்பிடிப்பை மீண்டும் துவக்கியிருக்கிறோம், கூடிய விரைவில் மொத்த படமும் முடிந்து விடும்.

பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், வினோத் யஜமான்யா இசையமைக்கிறார். கலை இயக்குனராக பி ராஜுவும், சிஎஸ் பிரேம் எடிட்டராகவும் பணிபுரிகிறார்கள். சண்டைப்பயிற்சி டேஞ்சர் மணி, பாடல்கள் ஜெயந்தா, ஸ்டில்ஸ் தேனி செல்வம்.

Cast

Cheran

Nandana Verma 

Sarayu Mohan

Srushti Dange 

Irfan

Crew 

Cameraman – MS Prabhu

Music Director – Vinod Yajamaanyaa

Art Director – P Raju

Editor – CS Prem

Fight master – Danger Mani

Lyric – Jayantha

Stills – Theni Selvam