நடிகர் நடிகைகள் :
ஆடுகளம் முருகதாஸ், பிரதிக்ஷா, வெலீனா, பக்ஸ் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – மூன் வாக் பிக்சர்ஸ்
இயக்கம் – ஹென்றி.ஐ
ஒளிப்பதிவு – நிக்கி கண்ணன்
இசை – சங்கர் ரங்கராஜன்
மக்கள் தொடர்பு – R. குமரேசன்
ஆடுகளம் முருகதாஸ், மனைவி மகளோடு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறார். கடையில் கிடைக்கும் குறைவான வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தாலும், தன்னுடய மகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்துவிடுவார் இல்லை என்று மறுப்பு சொல்லாமல். ஆனால், அவருடைய மனைவி வெலீனாவோ குடும்ப சூழ்நிலையை சொல்லி மகளை வளர்க்க வேண்டும் என்று முருகதாஸிடம் அறிவுரை அதை கேட்காமல் மகளை செல்லமாக வளர்க்கிறார்.
இந்த சமயத்தில், மகள் பள்ளியில் கூட படிக்கும் மாணவனின் பிறந்தநாளுக்காக அவனது வீட்டுக்கு போகும் பிரதிக்ஷா, அவனின் ஆடம்பரமான வீட்டை பார்த்து தனக்கும் ஒரு வீடு வாங்கி கொடுக்க கொடுக்க தந்தையிடம் கேட்கிறார். மகள் கேட்டதை இல்லை என்று சொல்லி ஏமாற்ற நினைக்காத முருகதாஸ், வீடு வாங்கி கொடுப்பதாக சொல்கிறார்.
சிறு வயதில் புரியாமல் ஆசைப்பட்ட மகள் சில நாட்களுக்கு பிறகு மறந்துவிடுவாள் என்று முருகதாஸ் நினைக்க, மகள் பிரதிக்ஷாவோ சொந்த வீடு ஆசையையே எந்த நேரமும் நினைத்து கொண்டு இருக்கிறார். முருகதாஸ், தனது மகளின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது தான் ‘ராஜாமகள்’ படத்தின் மீதிக்கதை.