ராஜாகிளி விமர்சனம்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் – சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா, பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், அருள் தாஸ், சுவேதா ஷ்ரிம்டன், ரேஷ்மா பசுபலேட்டி, சுபா, வி.ஜே. ஆண்ட்ரூஸ், மாலிக், கிங் காங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராஜாகிளி.

மனநலம் காப்பகத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்டு தன்னை அடையாளம் தெரியாத நிலையில், குப்பையில் இருப்பதை எடுத்து சாப்பிட்டு கொண்டிருக்கும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரித்து பாதுகாக்கிறார்.

அப்போது இரவில் தம்பி ராமையாவின் டைரியை படிக்கும் போது, பல தொழில்களுக்கு சொந்தக்காரரான பெரும் செல்வந்தர் முருகப்பன் இவர் தான், என்பது தெரிய வருகிறது.

அதி தீவிர முருக பக்தரான ஒரு தொழிலபதிபர் தம்பி ராமையா, மனைவி இருக்கும் போதே மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்கிறார். அந்தத் தொடர்பு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவி ஒருவரோடும் தொடர்பு கொள்கிறார்.

அந்தத் தொடர்பால் ஒருகொலை நடக்கிறது. தம்பி ராமையாவிற்கும் அந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்?
தம்பி ராமையா மனநலம் பாதிக்கப்பட்டவராக ஆவதற்கு காரணம் என்ன என்பதே ராஜாகிளி படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : உமாபதி ராமையா

இசை : தம்பி ராமையா மற்றும் சாய் தினேஷ்

தயாரிப்பு : வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் – சுரேஷ் காமாட்சி

ரேட்டிங் 4/5