சுரபி ஃபிலிம்ஸ் சார்பில், மோகன் தயாரிப்பில், நரேஷ் சம்பத் இயக்கத்தில், ஆரவ், ஆஷிமா நர்வல், நாசர், கே எஸ் ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகிபாபு, ஓவியா, பாகுபலி பிரபாகர், ராகவன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராஜபீமா.
சிறுவயதில் அம்மாவிடம் அதிக பாசமாக இருக்கும் ஆரவ், ஒரு கட்டத்தில் அம்மா இறந்து விட தனிமையில் யாரிடமும் பேசாமல் இருக்கிறார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு யானையை பார்த்ததும் மகிழ்ச்சியாகி சந்தோஷம் அடைகிறார். ஆரவின் மகிழ்ச்சியை கண்டதும் ஆரவின் தந்தையான நாசர் அந்த யானையை விலைக்கி வாங்கி கொடுத்து விடுகிறார்.
அந்த யானைக்கு பீமா என்று பெயர் வைக்கின்றனர் ஆரவும் அந்த யானையும் ஒரு நட்புடன் வளர்ந்து வருகின்றனர்.
திடீரென்று, வனத்துறை முகாமில் இருந்து வரும் வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை முகாமிற்கு அழைத்துச் செல்கின்றனர். தகவலறிந்த ஆரவ் முகாமிற்கு செல்ல, அங்கு யானை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
அங்கிருக்கும் அதிகாரிகளோ வேறு ஒரு யானையைக் காட்டி இதுதான் உன்னுடைய யானை பீமா என்று சொல்கிறார்கள் ஆனால் இது என்னுடைய யானை இல்லை என்று ஆரவ் சண்டை போடுகிறார். .
ஆரவின் யானை பீமா எங்கு போனது? என்ன ஆனது? அதனை ஆரவ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ராஜபீமா படத்தோட மீதிகதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : நரேஷ் சம்பத்
தயாரிப்பு : சுரபி பிலிம்ஸ்
தயாரிப்பாளர் : மோகன்
ஒளிப்பதிவாளர் : எஸ்.ஆர். சதீஷ் குமார்
இசை : சைமன் கே கிங்
எடிட்டர் : கோபிகிருஷ்ணா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
ரேட்டிங் 3/5


