ஒரு சில இடங்களில் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த பேட்டியில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில், “வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் மழை பெய்யும். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளது. நேற்று அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்தார்.