ரயில் விமர்சனம்

வேடியப்பன் தயாரிப்பில், பாஸ்கர் சக்தி இயக்கத்தில், குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ்வைத்யா, செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ்,தங்கமணி பிரபு மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரயில்.

நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார் பெயருக்கு தான், ஆனால் முழு நேர வேலையாக குடி பழக்கத்திற்கு தான் அடிமையாக இருக்கிறார்.

அதனால், அவரது மனைவி வைரமாலாவுக்கும் அவருக்கும் எப்பொழுதும் சண்டைதான். திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

மறுபுறம் வடநாட்டில் இருந்து வந்து குங்குமராஜன் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹர் வேலை ஒரு நல்ல வேலையிலிருந்து நன்றாக சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். அவரை பார்க்கும் போதெல்லாம் குங்குமராஜிற்கு கோவம் வருகிறது அவரைத் திட்டிக் கொண்டே இருக்கிறார் ஆனால் அவரது மனைவி வைரமாலாவோ பர்வேஸ் மெஹர்வை தனது சொந்த தம்பியாக நினைத்து பழகுகிறார்.

ஒரு நாள் பர்வேஸ் மெஹரு வைரமாலாவிடம் ஒரு பையை கொடுத்து வைத்திருக்கும் மாதிரி சொல்லிவிட்டு ஒரு வேலை விஷயமாக வெளியில் செல்கிறார்.

இதற்கிடையில் குங்குமராஜிர்க்கும் வைரமாலாவிர்க்கும் சண்டை வந்து குங்குமராஜை விட்டு பிரிந்து அப்பா வீட்டுக்கு சென்று விடுகிறார் வைரமாலா.

இந்த நிலையில் திடீரென்று பர்வேஸ் மெஹரு விபத்தில் இறந்து விட அவரது இறுதிச் சடங்கிற்காக அவரது மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோர் தேனிக்கு வருகிறார்கள்.

இறுதி சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் வைத்திருந்த பணம் பற்றி அவர்கள் வைரமாலாவிடம் கேட்கிறார்கள். அப்போதுதான் வைரமாலாவிற்கு பர்வேஸ் ஒரு பேக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது. அதை அவர் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து எடுக்கப் போகும் போது அந்த பேக் அங்கு இல்லை அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். வைரமாலா அந்த பேக்கை யார் எடுத்தார்கள்? அந்த பேக் கிடைத்ததா? இல்லையா? அதனை பர்வேஸ் மெஹர் குடும்பத்திடம் வைரமாலா ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே ரயில் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் – வேடியப்பன்
இயக்குநர் – பாஸ்கர்சக்தி
DOP – தேனிஈஸ்வர்
இசையமைப்பாளர் – S.J. ஜனனி
எடிட்டர் – நாகூரான் இராமச்சந்திரன்
சவுண்ட் – ராஜேஷ் சசீந்திரன்
பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா
மேனேஜர் – உசிலை சிவா