இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ் சினிமாவின் அடையாளமாக, பல பரிசோதனை முயற்சிகளுக்கு முன் மாதிரியாக, வெற்றியாளராக விளங்குபவர். அவரது சமீபத்திய படமான “ஒத்த செருப்பு சைஸ் 7” ரசிகர்களின் இதயங்களை அள்ளியதோடல்லாமல் Asia and India Book of Records ல் ஒருவரால் இயக்கி, நடித்து தயாரித்து உருவாக்கப்பட்ட படம் என்கிற சாதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கோல்டன் குளோப் ஜீரி மெம்பர்களுக்காக நிகழ்த்தப்பட்ட திரையிடலில் பெரும் பாராட்டை குவித்துள்ளது. மாறுபட்ட முயற்சியாக அனைவரும் இப்படத்தினை பாராட்டியுள்ளனர். மேலும் ஆஸ்கர் அகாடமி குழு நாளை அக்டோபர் 24 அன்று இப்படத்தை பார்க்கவுள்ளது மேலும் தமிழ் சினிமாவுக்கு மேலும் பெருமைகொள்ளும் தருணமாக உள்ளது.
இது பற்றி இயக்குநர் பார்த்திபன் கூறியதாவது…,
நான் முன்பே பலமுறை கூறியது போல் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தின் உருவாக்கம் என்பது உணர்ச்சிபூர்வமானதும் பல்வேறு சவால்கள் நிறைந்தததுமாகும். அந்த தருணங்களில் எனக்கு உற்சாகம் தந்தது இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனும் எண்ணம் தான். நமது ரசிகர்கள் தாண்டி தற்போது உலகளவில் இப்படத்திற்கு கிடைக்கும் பெரும் மரியாதையும், பராட்டும் என்னை நெகிழச்செய்வதாக உள்ளது. கோல்டன் குளோப் மெம்பர்களின் திரையிடல் என்பது எனக்கு வைக்கப்பட்ட உச்சபட்ச பரிட்சை போன்றிருந்தது. திரையிடலுக்கு பிறகு அவர்கள் என்னிடம் நெருக்கமாக உரையாடியதும், படம் பற்றி நிறைய விஷயங்கள் விவாதித்ததும் மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. மேலும் படத்தினை மாறுபட்டதொரு முயற்சியாக அவர்கள் பாராட்டியது எனக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். மேலும் இப்போது ஆஸ்கார் அகாடமி குழு திரையிடலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அமெரிக்காவில் (Metroplex Tamil Sangam at Dallas City ) மெட்ரோ பிளக்ஸ் தமிழ் சங்கம் டல்லாஸ் நகரக் குழு ஏற்பாடு செய்துள்ள இரவுணவுடன் கூடிய திரையிடலும் உரையாடலும் Fun Movie Grill Multiplex, Carrollton in Dallas ல் மாலை 4 மணி, அக்டோபர் 26 அன்று நடைபெற இருப்பது எனக்கு மேலும் பேருவகை அளிப்பதாக உள்ளது. இத்திரையிடலை ஏற்பாடு செய்த அவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.