கின்னஸ் உலக சாதனை மற்றும் ஆசிய ,இந்திய புத்தகங்களுக்கான உலக சாதனை

( 23.08.2019 இரவு 9 மணி முதல் 4 மணி முதல் 25.08.2019 4 மணி வரை இடைவேளை இன்றி  இரவு, பகலாக தொடர்ந்து), ( 27.08.2019 காலை 9 மணி  முதல் மதியம் 3 மணி வரை )

சென்னை, ஆக. 2019:- இராபா மீடியாவின் ஈவன்ஸ் இந்தியா தனது 4வது உலக சாதனை சென்னை கோவூரில் உள்ள கிரிஸ் இண்டர் நேஷ்னல் பள்ளியில் ஆகஸ்ட் 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. இந்த உலக சாதனை ஏறத்தாழ 3,000 மாணவர்கள் பங்கேற்கும் மூன்று கின்னஸ் சாதனைகள், ஆசிய, இந்திய புத்தக சாதனைகள் என தொடர்ந்து நிகழ்த்தபட உள்ளது.

கின்னஸ் சாதனை முயற்சியாக இந்திய பாரம்பரிய நடனங்களை மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக 40 மணிநேரம் இடைவேளை இன்றி  இரவு, பகலாக தொடர்ந்து நடனமாடி யாராலும் முறியடிக்க முடியாத உலக சாதனையை நிகழ்த்த உள்ளார்கள். தனி மனித திறமைக்கு மதிப்பளிக்கும் இந்த மகத்தான சாதனையை இராபா மீடியா மட்டுமே இந்திய அளவில் செயல் படுத்துகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சாதனையை கிரிஷ் இண்டர் நேஷ்னல் பள்ளியின் தாளாளர் DR.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள்

மாணவர்கள் தங்களது பல்வேறு திறமைகளை ஆகஸ்ட் 23 அன்று இரவு  9 மணி முதல் ஆகஸ்ட்  25 அன்று மாலை  4 மணி வரை 40 மணி நேரத்திற்கும் மேலாக இரவு,பகலாக கின்னஸ் உலக சாதனை மேடையில் தொடர்ந்து வெளிப்படுத்த உள்ளார்கள். இந்த சாதனையில் இந்திய பாரம்பரிய நடனங்கள் , மேற்கத்திய நடனங்கள் , டிரம்ஸ்,கீபோர்டு போன்ற இசைக்கருவிகள் , திறம்பட பேசுதல்,சிலம்பம், கராத்தே ,யோகா , பாடுதல் ,சதுரங்கம் ,கேரம் போன்ற உள்விளையாட்டுக்கள் என அனைத்து விதமான திறமை கொண்ட மாணவர்களும் பங்கேற்று கின்னஸ் உலக சாதனையாளர் என்ற பெருமையை அடைய உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகஸ்ட் 27 அன்று காலை 9 மணியளவில் 1150 மாணவர்கள் பங்குபெறும் பல்வேறு திறமைகளை சிந்திக்கும், வெளிப்படுத்தும் மனித ஆற்றல் எங்குள்ளது என்பதை பற்றிய அமர்வு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கின்னஸ் சாதனைக்காக நடைபெற உள்ளது. இந்த சாதனையை கிரிஷ் இண்டர் நேஷ்னல் பள்ளியின் தாளாளர் DR.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிகழ்த்துகிறார்கள். இதற்கு முன் 950 மாணவர்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட  இந்த சாதனை இப்போது 1150 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொணடு முறியடிக்கப்பட உள்ளது.

மேலும்,    ஆகஸ்ட் 27 அன்று காலை 11:30 மணியளவில் பரதகலையின் நளினங்களை, சிறப்புகளை விளக்கும் பாட வகுப்பு  600 மாணவர்களை கொண்டு கின்னஸ் சாதனைகாக நிகழ்த்தபட உள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனையை திருமதி. கவிதா ஸ்ரீநிவாசன் அவர்களும், திருமதி. சீதாலட்சுமி அவர்களும் பரத கலையின் நுட்பங்களை மாணவர்களுக்கு உணர்த்தி சாதனை புரிகிறார்கள்.இதற்கு முன் 350 மாணவர்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட  இந்த சாதனை இப்போது 600 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொணடு முறியடிக்கப்பட உள்ளது.