ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்தார். அப்போது பேசிய வைகோ மாண்புமிகு முதல்வர் என விரைவில் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படுவார் என்று வைகோ தெரிவித்தார். புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க அரசு தவறிவிட்டதாக தெரிவித்த அவர், ஆர்.கே.நகரில் எந்த மக்கள் நலப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.