அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என முன்னால் எம்.பி. பழனிச்சாமி வலியுறுத்தல்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என முன்னால் அ.தி.மு.க எம்.பி. கே.சி.பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்செங்கோடு முன்னால் எம்.பி. பழனிச்சாமி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சசிகலா, கட்சியின் பொதுச்செயலாளரே அல்ல எனவும் அவரை பொதுச்செயலாளராக நியமித்திருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். பன்னீர் செல்வத்தை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை எனவும் ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை அறிவிப்பை வரவேற்பதாகவும் கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வுக்கு பின்னர் அ.தி.மு.க கட்சி அலுவலகம், போயஸ் தோட்டத்து இல்லம் ஆகியவற்றை தொண்டர்கள் கைப்பற்றுவர் என பழனிச்சாமி கூறியுள்ளார்.