பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கம் பெற தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான மதிப்பெண்கள் பெறுவது மற்றும் பல்கலைக்கழக கல்வி நிகழ்வுகளில் பங்கேற்று திறனை வெளிப்படுத்துவது என்பது சிறந்த மாணவர்களுக்கு அவசியமானது என நீங்கள் எண்ணியிருக்கலாம்.
இப்போது மதிப்புமிக்க புனே பல்கலைக்கழகம் சில விரும்பதக்க நடவடிக்கையையும் இதில் இணைத்து உள்ளது, அதாவது நீங்கள் ‘கோல்ட் மெடல்’ வாங்க வேண்டும் என்றால் அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே. அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘மோல்ட் மெடல்’ பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ‘தி குயின்ட்’ செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது_