புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்.
– புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன்படுத்த வேண்டும்.
– விந்துவை கெட்டிபடுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
– அஜீரண கோளாறு அகன்று, எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
– குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
– இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது.
– மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
– நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது.
– பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைபடுதலை குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையே அதிகரிக்க செய்கிறது.
– இதில் அதிகம் நீர்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
– வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.