கோவில்பட்டி அருகேயுள்ள துறையூர் கிராமம். இங்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர், சாலைவசதி, வாறுகால் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், ஊராட்சி மன்ற செயலாளராக இருக்கும் முத்துலெட்சுமி என்பவர் அரசு திட்டங்களை தனக்கு வேண்டியவர்களுக்கும் மட்டும் வழங்கி பாரட்பட்சமாக நடந்து வருவதகாவும், தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதகாவும், வீட்டுக்காக வரி வசூல் செய்தவற்கு கையூட்டு கேட்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பாரபட்சமாக செயல்படும் ஊராட்சி மன்ற செயலர்; மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராமத்தினை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்வர்கள் கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் தீடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் கிடைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலஹரிஹரமோகன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது