கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் முன்பு கோவில்பட்டி வட்டார ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் சாலைபாதுகாப்பு சட்ட மசோத 2016யை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலைபாதுகாப்பு சட்ட மசோத என்ற பெயரில் பொதுமக்களை அலைக்கழிப்பதுடன், கார்பேட் நிறுவனங்கள் பயன்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த சட்டம் மூலமாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பாதிக்கப்படுவதும் மட்டுமின்றி அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும், எனவே இச்சட்டத்தினை கண்டித்தும், திரும்பபெற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கணபதி பாண்டியன்தலைமை வகித்தார்.
இதில் வட்டார ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரத், நிர்வாக்குழு உறுப்பினர்கள் ராஜா, ஸ்ரீதர், துணை செயலாளர் செந்தில்குமார், பகத்சிங்மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டுராமன் மற்றும் திரளான ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், அவற்றி பணிபுரியும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.