தேனி மாவட்டம், கம்பம் நகரில் உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கம்பம் 4ம் வார்டு மாலையம்மாள்புரம் பகுதியில் உள்ள வீடுகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சுமார் 50 கிலோ எடை கொண்ட பாலித்தீன் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோபாலுக்கு ரூ.50 அயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.”